ராமநாதபுரத்தில் திடீரென கொட்டி தீர்த்த மழை
ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது தெரிந்ததே. இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. காலையிலேயே வழக்கம்போல வெயில் அடிக்கத்தொடங்கிய நிலையில் பகல் 12 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக மாறியது.
இதனை தொடர்ந்து பலத்த காற்றுடன் ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்யத்தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
பல நீர்நிலைகளில் குறிப்பிடத்தக்க தண்ணீர் சேரத்தொடங்கி உள்ளது.பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமநாதபுரம் நகரில் வெப்ப சலன நிலை மாறி குளிர்ச்சி நிலவியதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர்.
---------
Related Tags :
Next Story