பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 18 Sept 2021 12:35 AM IST (Updated: 18 Sept 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

தங்கச்சிமடத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீரென்று இறந்தார்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்ெபக்டராக பணியாற்றி வந்தவர் இந்திரன் (வயது 56.) இவர் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் சுக்குபாறை தேரிவிளை பகுதியை சேர்ந்தவர். இவருடைய மனைவி ஆதிலட்சுமி.இவருக்கு வரதன் மகனும், வதனா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இந்திரன் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது பாம்பனில் இருந்து ராமேசுவரம் வந்த அரசு பஸ்சில் 2 பேர் குடிபோதையில் தகராறு செய்துள்ளனர்.இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தங்கச்சிமடம் போலீஸ் நிலையம் முன்பு பஸ்சை நிறுத்திவிட்டு போலீசில் புகார் செய்தார். பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் இந்திரன் மற்றும் போலீசார் தகராறு செய்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென இந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே போலீசார் அவரை சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ெசன்றனர். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story