ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2021 12:47 AM IST (Updated: 18 Sept 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் மராட்டிய மாநிலத்தில் பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் பழனி குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story