ஊரக உள்ளாட்சி தேர்தல்; கரூர் மாவட்டத்தில் 2 பேர் மனு தாக்கல்
ஊரக உள்ளாட்சி தேர்தலலையொட்டி கரூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.
கரூர்,
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதியும், மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் காலி பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் எந்த வேட்பாளரும் மனுதாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று 2 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கடவூர் ஊராட்சி ஒன்றியம், காளையபட்டி வார்டு எண் 6-க்கு சின்னதுரை, கருப்பசாமி ஆகிய 2 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருகிற 22-ந்தேதி இறுதி நாளாகும்.
Related Tags :
Next Story