பாண்டியர் கால கல் தொட்டி கண்டெடுப்பு


பாண்டியர் கால கல் தொட்டி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 1:14 AM IST (Updated: 18 Sept 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. 
கல் தொட்டி 
அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட கல்தொட்டியினை  எஸ்.பி.கே. கலைக்கல்லூரி வரலாற்றுதுறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வரலாற்றுத்துறை மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் கண்டெடுத்தனர். 
இதுகுறித்து பேராசிரியர் ரெ.விஜயராகவன் கூறியதாவது:- 
 கால்நடைகளின் தாகம் தணிக்கும் பொருட்டு நம் முன்னோர்கள் ஆங்காங்கே தண்ணீர் நிரம்பிய கல் தொட்டிகளை அமைத்தனர். தற்போது கண்டறிந்துள்ள கல்தொட்டியானது 7 அடி நீளமும், 2 அடி அகலமும், 2 ¼ அடி உயரமும், ஒரு டன்னுக்கு மேற்பட்ட எடையும் பக்கவாட்டில் கல்வெட்டுடன் உள்ளது. 
வணிகர்கள் இருப்பிடம் 
எழுத்துக்கள் மங்கிய நிலையில் காணப்படும் இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வெண்புநாடு செங்காட்டுருக்கை என்பது அருப்புக்கோட்டையின் பாண்டியர் காலத்து பெயர் ஆகும். 
வெண்பு நாடு என்பது அருப்புக்கோட்டையின் தெற்கு பகுதியை குறிக்கிறது. அப்பகுதியில் இருந்த பாண்டியர் காலத்தை பெருமாள் பூவன் என்பவர் கொடையாக இக்கல்தொட்டியை அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டையும், செங்காட்டிருக்கையும் இந்திய கல்வெட்டு ஆவணங்களின் படி பிற்காலபாண்டியர் (13-ம் நூற்றாண்டு) காலத்தில் தான் இவ்வூரானது செங்காட்டிருக்கை என அழைக்கப்பட்டது. என்பதை அறியலாம். செங்காட்டிருக்கை என்பது சிவந்த மண் கொண்ட வணிகர்கள் இருப்பிடம் ஆகும். நம் முன்னோர்கள் பிற உயிரை தன் உயிராக பாவிக்கும் ஜீவ காருண்ய நெறியில் மேம்பட்டு இருந்தார்கள் என்பதை இதன் மூலம் உணர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். 



Next Story