திருச்சியில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி


திருச்சியில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 18 Sept 2021 1:32 AM IST (Updated: 18 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திருச்சி, செப்.18-
திருச்சியில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ெபண் போலீஸ்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயியான இவருடைய மனைவி பிரேமா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து ஆயுதப்படையில் முதல்நிலை போலீசாராக பணியாற்றி வருகிறார்.
தம்பதி இருவரும் கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை பிரேமாவின் மகன் சேட்டை செய்ததால் அதனை பிரேமா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாண்டியனுக்கும் பிரேமாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமா வீட்டின் அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே பாண்டியன் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அவரை மீட்டு கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story