பட்டப்படிப்புக்கு 212 மாணவர்கள் சேர்ந்தனர்
முதுநிலை பட்டப்படிப்புக்கு 212 மாணவர்கள் சேர்ந்தனர்
உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2021 2022-ம் கல்வியாண்டில் முதுநிலைப்பாடப்பிரிவுகளில் மொத்தம் 265 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 23 மாணவர்களும், ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 19 மாணவர்களும், வணிகவியல் பாடப்பிரிவில் 37 மாணவர்களும், பொருளியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில் 9 மாணவர்களும், சுற்றுலாவியல் பாடப்பிரிவில் 11 மாணவர்களும், இயற்பியல் பாடப்பிரிவில் 26 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் 20 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 20 மாணவர்களும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 33 மாணவர்களும் என மொத்தம் 212 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்தார்.அடுத்தகட்ட கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story