மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு


மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 18 Sept 2021 3:19 AM IST (Updated: 18 Sept 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூரில் பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை;
மதுக்கூரில் பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மின்சாரம் தாக்கியது
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 38). இவர் மதுக்கூர் மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மதுக்கூர் அடுத்த வேப்பங்குளம் பகுதியில் ஏழு கண்ணு பாலம் என்ற இடத்தில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின்போது புதிய மின் கம்பத்தை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ஊன்றிய போது அந்த மின் கம்பத்தை ராமச்சந்திரன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி புதிய மின் கம்பத்தில் உரசியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை மின்சாரம் தாக்கியது. 
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை. அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  அவரது உடல். பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு பிரபா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 
சாலை மறியல்
ராமச்சந்திரன் இறந்து நீண்ட நேரம் கடந்த பிறகும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறி அவரது 
உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமச்சந்திரன் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில்  சாலை மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து மதுக்கூர்

Next Story