பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியீடு


பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியீடு
x
தினத்தந்தி 18 Sept 2021 3:28 AM IST (Updated: 18 Sept 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது.

ஓமலூர்:
ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தொடர்ந்து 2-வது முறையாக பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். பின்னர் அவர் பிரதமர், முதல்-அமைச்சர், கவர்னர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் ஓமலூர் அடுத்த பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பன் இல்லத்தில் அவருக்கு மை ஸ்டாம்ப் தபால் தலை வெளியிடப்பட்டது. இதனை சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அஞ்சல் துறையினர் நேரில் வழங்கினர். மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு நாடு முழுவதும் இருந்து வந்த 510 வாழ்த்து இபோஸ்ட்களை வழங்கினார். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மை ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தமுறை மழையின் காரணமாக தங்கப்பதக்கம் பெற முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் தங்கப்பதக்கம் வெல்வேன். மேலும் பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் பேசிய பின்பு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. இளைஞர்கள் ஒரு வேலையில் முழு மனதுடன் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்று தெரிவித்தார்.

Next Story