செப்டம்பர் 18: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


செப்டம்பர் 18: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 18 Sep 2021 1:16 AM GMT (Updated: 18 Sep 2021 1:16 AM GMT)

சென்னையில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. 

இதற்கிடையில், சென்னையில் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் லிட்டர் ரூ.98.96-க்கும், டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

இந்நிலையில், 13-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story