அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு


அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு
x
தினத்தந்தி 18 Sep 2021 10:35 AM GMT (Updated: 18 Sep 2021 10:35 AM GMT)

கம்பத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடந்தது.

கம்பம்:
கம்பம் கோம்பை சாலைத்தெருவை சேர்ந்தவர் முகமது தமீம் அன்சாரி (வயது 41) இவர் எல்.எப்.மெயின்ரோட்டில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் மேல்மாடியில் ரெடிமேடு துணிகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதேபோல் கீழ்தளத்தில் இருந்த உரக்கடையின் பின்பக்க கதவை உடைத்து அங்கிருந்து ஒரு செல்போன் மற்றும் அதை அடுத்து இருந்த எலக்ட்ரிக் கடையின் பின்பக்க கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து முகமது தமீம் அன்சாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் புவனேஸ்வரி (வடக்கு), லாவண்யா (தெற்கு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அருகே உள்ள வணிகர்களிடம் விசாரணை நடத்தினார். கம்பத்தில் உள்ள முக்கிய சாலையில் அடுத்தடுத்து கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story