பள்ளி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த வாலிபர் கைது
திருவள்ளூரை அடுத்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் பள்ளி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருந்த பண்ணூர் சுசையபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 28) என்பவர் பள்ளி அருகே நின்றுகொண்டு அந்த வழியாக வருவோர் போவோரை தகாத வார்த்தைகளால் பேசி கொரோனா காலத்தில் பள்ளியை திறந்து வைத்து உள்ளார்கள் என்று கூறி அரசுக்கு எதிராக பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்தும் இடையூறாக சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதை தொடர்ந்து போலீசார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story