கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் 10 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் 10 பேரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல்:
Ôமலைகளின் இளவரசிÕயான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் நகரின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் வலம் வருகின்றன. குறிப்பாக ஏரிச்சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. அவை ஏரிச்சாலைக்கு வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருவதுடன், குழந்தைகளை குறி வைத்து கடித்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று காலை கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏரிச்சாலையில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 தெருநாய்கள், சுற்றுலா பயணிகளை கடித்து குதறின. இதனால் நாய்களை கண்டதும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் தெருநாய்கள், அவர்களை விடாமல் விரட்டிச்சென்று கடித்தன. இதில் 10&க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தெருநாய்கள் தொல்லை குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது சுற்றுலா பயணிகளை கடித்த தெருநாய்களை பிடிக்க நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஏரிச்சாலையில் சுற்றித்திரிந்த 10&க்கும் மேற்பட்ட தெருநாய்களை நகராட்சி சுகாதார ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். இதேபோல் நகரில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story