உப்பாற்று ஓடையில் 3 அம்மன் சிலைகள் மீட்பு
ஓட்டப்பிடாரம் அருகே உப்பாற்று ஓடையில் 3 அம்மன் சிலைகள் மீட்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள உமரிகோட்டை கிராமத்தில் கோரம்பள்ளம் அணைக்கட்டுக்கு செல்லும் உப்பாற்று ஓடையில் நேற்று மாலையில் அப்பகுதி பொதுமக்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நீர் வரத்து ஓடையில் 3 அம்மன் சிலைகள் தண்ணீருக்குள் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி தட்டப்பாறை போலீஸ் நிலையத்திற்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சிலைகளை மீட்டனர். பின்னர் 3 சிலைகளையும் தட்டப்பாறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த சிலைகள் எங்குள்ள சிலைகள், இங்கு எப்படி வந்தது, கோவிலில் திருடி தப்பிக்கும் போது தண்ணீரில் போட்டு விட்டு சென்றார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story