சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story