10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
கயத்தாறு அருகே 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சிவஞானபுரம் பஞ்சாயத்து வாகைகுளத்தில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு பனை விதைகளை ஊன்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இன்று ஒரே நாளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பனைவிதைகளை நடவு செய்தனர்.. இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் பால், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் குமார்ராஜா, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ராஜதுரை, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story