புதிய துறைமுகம் கடற்கரையில் 1 டன் குப்பைகள் அகற்றம்
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
தூத்துக்குடி:
உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலோர காவல் படை தூத்துக்குடி பிரிவு சார்பில் டி.ஐ.ஜி. அரவிந்த் சர்மா தலைமையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி நடந்தது. கடலோர காவல் படையை சேர்ந்த 120 வீரர்கள் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 67 பைகளில் ஏறத்தாழ ஒரு டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story