2-வது மாபெரும் தடுப்பூசி முகாம்
மாவட்டத்தில் 2-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
விருதுநகர்,
மாவட்டத்தில் 2-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 2&வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தொடர்நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக கொரோனா நோய் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழத்தை கொரோனா 3-வது அலையிலிருந்து பாதுகாப்பதற்காகவும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு அதன்படி மாநிலம் முழுவதும் இலவச தடுப்பூசி செலுத்த பல்வேறு இடங்களில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
சாதனை
இதில் கடந்த 12-ந் தேதியன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 75,643 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 53 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதத்தை எட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் கண்டிப்பாக இன்று நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story