ரூ.3 லட்சத்துக்கு மக்காசோளம் விற்பனை


ரூ.3 லட்சத்துக்கு மக்காசோளம் விற்பனை
x
தினத்தந்தி 19 Sept 2021 12:21 AM IST (Updated: 19 Sept 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு மக்காசோளம் விற்பனை



தாராபுரம்
தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 17 ஆயிரத்து 203 கிலோ மக்காச்சோளத்தை கொண்டு வந்திருந்தனர். அதற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. அதில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அதிக பட்சமாக கிலோ ரூ.2,125-க்கும், குறைந்த பட்சமாக ரூ.2,110- க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 407-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்து இருந்தார்.
இந்த தகவலை திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story