சிறுமியை திருமணம் செய்தவர் கைது


சிறுமியை திருமணம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 12:56 AM IST (Updated: 19 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்தவர் கைது

ராமநாதபுரம், செப்
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் மனோகர்(வயது 32). இவருக்கும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரின் தாய் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முகநூல் மூலம் பழகிய மனோகர் சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தனர். வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story