பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Sept 2021 1:28 AM IST (Updated: 19 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

உவரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை:

உவரி அருகே இலக்கரிவிளையைச் சேர்ந்தவர் தனசேகர் மார்த்தாண்டம். இவருடைய மனைவி அழகு பூபதி (வயது 58). இவர்களுடைய மூத்த மகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தனசேகர் மார்த்தாண்டமும் இறந்து விட்டார். 

இதனால் மனமுடைந்த அழகு பூபதி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story