கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 67 ஆயிரத்து 83 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 14 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 587 ஆக உள்ளது.
1, 080 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 29 லட்சத்து 13 ஆயிரத்து 713 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 15 ஆயிரத்து 755 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 263 பேர், தட்சிண கன்னடாவில் 133 பேர், உடுப்பியில் 86 பேர், மைசூருவில் 74 பேர் உள்பட 889 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு நகரில் 6 பேர், தட்சிண கன்னடா, உடுப்பியில் தலா 2 பேர், ஹாசன், கோலார், சிவமொக்கா, துமகூருவில் தலா ஒருவர் இறந்தனர். 23 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story