பாதாள சாக்கடை குழிக்கு புதிய மூடி
பாதாள சாக்கடை குழிக்கு புதிய மூடி
பாதாள சாக்கடை குழிக்கு புதிய மூடி
தஞ்சை அய்-யங்கடை தெரு, வைத்-தி-லிங்கம் கொத்-த-னார் சந்-தில் பாதாள சாக்கடை குழி பரா-ம-ரிப்பு இன்றி, மூடி உடைந்து குழி-யி-னுள் கல், போன்-ற-வற்றை வைத்து அடைத்து வைத்-தி-ருப்-ப-தாக கடந்த 16ந் தேதி புகார் பெட்-டி-யில் செய்தி வெளி-யா-னது. செய்தி வெளி-யா-னதை தொடர்ந்து சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மூலம் பாதாள சாக்கடை குழிக்கு புதி-தாக மூடி அமைக்கப்-பட்-டுள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-களுக்கும், செய்தி வெளி-யிட்ட தினத்-தந்-திக்கும் அப்-ப-குதி மக்கள் நன்றி தெரி-வித்-த-னர்.
தஞ்சை அய்-யங்கடை தெரு பகுதி மக்கள்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா
தஞ்சை மாவட்-டம் கொல்-லாங்க-ரை-யில் ஊராட்சி ஒன்-றிய தொடக்க-பள்ளி உள்-ளது. இந்த பள்-ளிக்கு சுற்-றுச்-சு-வர் அமைக்கப்-ப-டா-மல் உள்-ளது. இத-னால் இரவு நேரங்க-ளில் கால்-ந-டை-களின் கூடா-ர-மாக பள்ளி மாறி உள்-ளது. இத-னால் பள்ளி வளா-கத்-துக்குள் கால்-நடை கழி-வு-கள் நிறைந்து காணப்-ப-டு-கின்-றன. எனவே பள்ளி வளா-கத்-துக்கு சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்டு மாணவ&மாண-வி-களுக்கு நோய்-தொற்று ஏற்-ப-டும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் பள்-ளிக்கு சுற்-றுச்-சு-வர் கட்ட நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
பன்-னீர்-செல்-வம், கொல்-லாங்கரை.
வடிகால் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்-டம் திருக்காட்-டுப்-பள்ளி செந்-தலை கிரா-மத்-தில் மீனாட்சி சுந்-த-ரேஷ்-வ-ரர் கோவில் உள்-ளது. இந்த கோவி-லுக்கு தின-மும் திர-ளான பக்தர்கள் வந்து செல்-கின்-ற-னர். இந்த நிலை-யில் கோவி-லுக்கு வரும் சாலை பரா-ம-ரிப்-பின்றி குண்-டும், குழி-யு-மாக காட்சி அளிக்கி-றது. அது-மட்-டு-மின்றி மழைக்கா-லங்க-ளில் சாலை-யில் மழை-நீர் குளம் போல் தேங்கி நிற்-கும் அவல நிலை உள்-ளது. இத-னால் கோவி-லுக்கு வரும் பக்தர்கள், பொது-மக்கள், வாகன ஓட்-டி-கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளா-கி-வ-ரு-கின்-ற-னர். எனவே மழை-நீர் தேங்-கா-மல் வடிந்து செல்-வ-தற்கு வச-தி-யாக வடி-கால் வசதி செய்து தர நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
செந்-தலை கிராம மக்கள், திருக்காட்-டுப்-பள்ளி.
பராமரிப்பின்றி காணப்படும் பூங்கா
தஞ்சை புதிய பஸ்-நி-லை-யம் அரு-கில் புதிய வீட்டு வசதி வாரிய குடி-யி-ருப்பு உள்-ளது. இந்த குடி-யி-ருப்பு பகு-தி-யில் பூங்கா ஒன்று உள்-ளது. பூங்-கா-வில் தின-மும் 100க்கும் மேற்-பட்-டோர் நடை-ப-யிற்சி மேற்-கொள்-வார்கள். குழந்-தை-களில் பொது-போக்கு தள-மாக இருந்-தது. தற்-போது இந்த பூங்கா உரிய பரா-ம-ரிப்பு இன்றி, செடி,கொடி-கள் புதர் மண்டி காணப்-ப-டு-கி-றது. பொம்-மை-கள் சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் இந்த பூங்-காவை சீர-மைத்து பயன்-பாட்-டுக்கு நட-வ-டிக்கை எடுக்க-வேண்-டும்.
ஆல்-பர்ட், தஞ்-சா-வூர்.
ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
தஞ்சை மாவட்-டம் கும்-ப-கோ-ணம் தாலு-கா-வில் துவ-ரங்-கு-றிச்சி அர-சல் ஆறு உள்-ளது. இந்த
ஆற்-றின் பாலத்-தின் அரு-கில் பல்-வேறு குடும்-பத்-தி-னர் வசித்து வரு-கின்-ற-னர். இவர்க-ளுக்கு குப்-பை-கள் கொட்ட குப்பை தொட்-டி-கள் வைக்கப்-ப-ட-வில்லை அத-னால் அப்-ப-கு-தியை சேர்ந்த மக்கள் குப்-பை-களை ஆற்-றில் கொட்டி விடு-கின்-ற-னர். இத-னால் சுகா-தார
சீர்-கேடு ஏற்-ப-டு-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் ஆற்-றில் குப்-பை-கள்
கொட்-டு-வதை தடுக்க உரிய நட-வ-டிக்கை எடுக்க-வேண்-டும் என்று அப்-ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
துவ-ரங்-கு-றிச்சி பகுதி மக்கள், கும்-ப-கோ-ணம்.
Related Tags :
Next Story