இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் - விஜயேந்திரா பரபரப்பு பேட்டி


இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் - விஜயேந்திரா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 19 Sept 2021 2:36 AM IST (Updated: 19 Sept 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் நடைபெறும் எந்த ஒரு இடைத்தேர்தல்களிலும் போட்டியிட போவதில்லை என்று எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

தாவணகெரே:

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார்

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த பின்பு, அவரது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி கொடுக்கப்படும் என்றும், மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் தனது மகன் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தாவணகெரேயில் பா.ஜனதா துணை தலைவரான விஜயேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கட்சி எடுக்கும் முடிவே...

மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் நான் போட்டியிட மாட்டேன் என்று முன்னாள் முதல்&மந்திரியாக எடியூரப்பா உறுதியாக தெரிவித்துள்ளார். அதன்படி மாநிலத்தில் நடைபெற உள்ள எந்த ஒரு இடைத்தேர்தல்களிலும் போட்டியிட போவதில்லை. நான் எந்த தொகுதியில், எப்போது போட்டியிட வேண்டும் என்பது குறித்து பா.ஜனதா கட்சியும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் முடிவு எடுப்பார்கள். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது. சரியான நேரத்தில் கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

தற்போது மாநிலத்தில் துணை தலைவராக இருந்து வருவதால், பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அதுவே எனது முதல் குறிக்கோள். முன்வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரியான முடிவு எடுக்கப்படும். அதுபற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் உரிய ஆலோசனை நடத்தி சரியான நேரத்தில் அறிவிப்பார்கள். மந்திரிசபையில் தற்போது 4 இடங்கள் காலியாக உள்ளன. ரேணுகாச்சார்யாவுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் முடிவு எடுப்பார்.
இவ்வாறு விஜயேந்திரா கூறினார்.

Next Story