மசாஜ் சென்டர் என்ற பெயரில் வீட்டில் விபசாரம்; தம்பதி கைது
சேலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கன்னங்குறிச்சி:
சேலம் சின்னத்திருப்பதி குருக்கள் காலனியில் வீட்டில் வைத்து விபசாரம் நடைபெறுவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஆகியோர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். இதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, கேரளாவைச் சேர்ந்த ஜெலீல் (வயது 32), அவருடைய மனைவி சொமியா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு பெண்ணை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story