மாவட்ட செய்திகள்

சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி + "||" + Chennai Football match on behalf of BJP

சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி

சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி
தமிழக பா.ஜ.க. சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பா.ஜ.க. தென்சென்னை மாவட்டம் சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, கால்பந்து இறுதி போட்டியை கண்டு ரசித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற டும்மிங்குப்பம் அணிக்கும், 2-வது பரிசு பெற்ற பட்டினப்பாக்கம் அணிக்கும் மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்கு
சென்னையில் நேற்று முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....!
அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னை, டெல்லியில் நடமாடும் ஆஸ்பத்திரிகள்: மத்திய சுகாதார மந்திரி
சென்னையிலும், டெல்லியிலும் தலா 100 படுக்கை வசதியுடன் நடமாடும் ஆஸ்பத்திரிகளை மத்திய அரசு அமைக்கிறது.
4. அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னை கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
5. சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.