மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2021 6:37 PM IST (Updated: 19 Sept 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு மேட்டு காளியம்மன் கோவில் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சீனிவாசன் தலைமை வகித்தார்.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவு படுத்த கோரியும், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க ேவண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒருவரை பிரதமர் போல் முகமூடி அணிந்து உட்கார வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் முருகன், நகர குழு உறுப்பினர்கள் சக்திவேல் முருகன், விஜயலட்சுமி, அந்தோணி செல்வம், நிர்வாகிகள் மாரியப்பன், மாரீஸ்வரன், பாலசுப்பிரமணியன், பாஸ்கர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா்.

Next Story