மாட்டு சந்தையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
தல்லாகுளம் மாட்டு சந்தையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு, கூடுதல் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை
தல்லாகுளம் மாட்டு சந்தையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு, கூடுதல் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
தல்லாகுளம் மாட்டு சந்தை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 2&வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வேட்டவலத்தில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப் சென்றார்.
அப்போது திருவண்ணாமலை அருகே உள்ள தல்லாகுளம் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு சந்தையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டிருப்பதை பார்த்தார். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இனி தல்லாகுளம் சந்தைக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதுபற்றி தண்டோரா மூலம் அறிவிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தண்டோரா மூலம் அறிவிப்பு
இதையடுத்து தல்லாகுளம் சந்தைக்கு சென்ற ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) கருணாநிதி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆ.சம்பத் மற்றும் அலுவலர்கள் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே சந்தைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தெரிவித்தனர்.
இதுபற்றி தண்டோரா மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story