திருப்பூரில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட முயன்ற பழைய குற்றவாளிகள் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூரில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட முயன்ற பழைய குற்றவாளிகள் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
x
தினத்தந்தி 19 Sept 2021 9:52 PM IST (Updated: 19 Sept 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட முயன்ற பழைய குற்றவாளிகள் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூரில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட முயன்ற பழைய குற்றவாளிகள் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். 
தனிப்படைகள்
திருப்பூர் மாநகரில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, கூட்டுக்கொள்ளை ஆகிய குற்றங்களை தடுக்கவும், மாநகரில் உள்ள பழைய குற்றவாளிகளை பிடிக்கவும், மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 
இந்த தனிப்படை போலீசார் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்ற திருவாரூர் காட்டூரை சேர்ந்த காளிதாஸ்(வயது 50), மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன்(29), மதுரை பொன்மேனியை சேர்ந்த அபினேஷ்(20) ஆகிய 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களில் காளிதாஸ் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் திருட்டு, கஞ்சா வழக்கு உள்பட மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. சவுந்திரபாண்டியன் மீது மதுரை, ஜெய்ஹிந்த்புரம், கீரைத்துரை, அழகர்கோயில் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட 17 வழக்குகள் உள்ளன.  
6 பேர் கைது
இதுபோல் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட சாமுண்டிபுரத்தை சேர்ந்த விஜய்(26), ஆத்துப்பாளையத்தை சேர்ந்த கவின்குமார்(20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். விஜய் மீது கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்பட 6 வழக்குகளும், கவின்குமார் மீது 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 கொலைமிரட்டல் வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன.
திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நெருப்பெரிச்சல் பாரதிநகரை சேர்ந்த செல்வராஜை(54) கைது செய்தனர். இவர் மீது கொலைமிரட்டல், கஞ்சா உள்பட 13 வழக்குகள் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் உள்ளன. இவர்கள் 6 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 
குண்டர் சட்டம்
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார். மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனிப்படை அமைத்தும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ரோந்து அதிகப்படுத்தப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது மேற்கொள்ளப்படும் என்றும் கமிஷனர் தெரிவித்தார். 

Next Story