பெண் மர்மச்சாவு
தூசி அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி,
தூசி அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி தகராறு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 35). இவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்த வாசுதேவன் மகள் ராஜேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் கோலேஷ் கண்ணன் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி உள்ளார்.
பெண் மர்மச்சாவு
நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டில் தூங்கி உள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் ராஜேஸ்வரி எழுந்திருக்காமல் இருக்கவே மாமியார் எல்லம்மாள் சென்று பார்த்த போது ராஜேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்&இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story