திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 Sep 2021 4:32 PM GMT (Updated: 19 Sep 2021 4:32 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். 

2-வது கட்ட தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12&ந்தேதி மாவட்ட முழுவதும் 1,004 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நேற்று 1,004 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 750 பேர் 2&வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாம்கள் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. முகாமில் பொதுமக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்பட்டது.

முகாம்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 6 மண்டல அதிகாரிகள் தொடர்ந்து முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் ஆகியோர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வந்தனர். 

திருவண்ணாம மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்துகொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். 

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், நகராட்சி ஆணையர் சந்திரா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story