திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 முகாம்களில் 23,631 பேருக்கு கொரொனா தடுப்பூசி


திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 முகாம்களில் 23,631 பேருக்கு கொரொனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Sept 2021 10:38 PM IST (Updated: 19 Sept 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த 500 முகாம்களில் 23,631 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த 500 முகாம்களில் 23,631 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 500 வாக்குசாவடி மையங்களில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வநது தடுப்பூசி போட்டு கொண்டனர். திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, அதிபெரமனூர், ஜங்காலபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களை முகாம்களை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது என கேட்டறிந்தார்.

தொடர்ந்து கொத்தக்கோட்டை, மேல்நிம்மியம்பட்டு, ரெட்டியூர், ஆம்பூர் அருகே ஆலங்குப்பம் பகுதிகளில் நடந்த முகாம்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அங்கு பண்புரிந்த டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது குறித்தும் கேட்டறிந்தார். 

23,631 பேருக்கு போடப்பட்டது

கொரோனா தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று செலுத்த வேண்டும் எனவும், முகாம்களில் இருப்பிலுள்ள தடுப்பூசிகளை 100 சதவிகிதம் பொது மக்களுக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஆய்வுகளின் போது தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், தாசில்தார்கள் பூங்கொடி, மோகன், அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 மையங்களில் மாலை வரை நடந்த இந்த சிறப்பு முகாமில் 23,631 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


Next Story