ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,496 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,496 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்
x
தினத்தந்தி 19 Sept 2021 10:46 PM IST (Updated: 19 Sept 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணியில் 11,494 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணியில் 11,494 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார். 

11,496 அலுவலர்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் ஆயிரத்து 410 வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1 முதல் 6 வரையிலான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 1,887 அலுவலர்களும், சோளிங்கர் ஒன்றியத்தில் 1,608 அலுவலர்களும், அரக்கோணம் ஒன்றியத்தில் 1,872 அலுவலர்களும், நெமிலி ஒன்றியத்தில் 1,720 அலுவலர்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 1,003 அலுவலர்களும், ஆற்காடு ஒன்றியத்தில் 1,526 அலுவலர்களும், திமிரி ஒன்றியத்தில் 1,880 அலுவலர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 496 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். 

குலுக்கல் முறையில் 

இவர்களுக்கான பயிற்சி மற்றும் மையம் கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். தேர்வான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 24&ந் தேதி முதல் கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உள்ளாட்சித் தேர்தல் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, தேசிய தகவல் அலுவலர் ஹரிஹரன், அனைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story