தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 19 Sep 2021 7:20 PM GMT (Updated: 19 Sep 2021 7:20 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிப்பு இன்றி காணப்படும் பொது சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி அயிலாப்பேட்டையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் மற்றும் குழந்தைகள் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது பராமரிப்பு இன்றி சாக்கடை கால்வாய்கள் சரிசெய்யப்படாமல் புதர்மண்டி தண்ணீர் செல்ல வழியின்றி கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜ்குமார், அயிலாப்பேட்டை, திருச்சி. 

நூலகத்திற்கு கட்டிடம் தேவை 
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் பொன்பரப்பி கிராம ஊர்புற நூலகத்திற்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆனால் போதிய கட்டிட வசதி இல்லாததால் அவை நூலகத்தில் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கராத்தே சரவணன், குவாகம், அரியலூர்.

மழை நீரில் மிதக்கும் தெருக்கள்  
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரந்தாமன் நகர் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி ஆகியவை ஏற்படுத்திதராமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி அதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கீரனூர், புதுக்கோட்டை. 

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அண்ணாநகர் 6-வது வார்டு பகுதியில் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதிமக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்துகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
மணிவேல், பள்ளப்பட்டி, கரூர். 

நிறுத்தப்பட்ட அரசு பஸ் 
பெரம்பலூர் மாவட்டம்,   செங்குணம் கிராமத்திற்கு  நாள்தோறும் காலை 8:15 மணிக்கு 3பி என்ற எண் கொண்ட அரசு நகர பஸ் பீல்வாடி கிராமத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த வழித்தடத்தில்  பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், செங்குணம், பெரம்பலூர்.

பாதியில் நிற்கும் வடிகால் அமைக்கும் பணி 
கரூர் மாவட்டம் 48-வது வார்டு வெங்கக்கல்பட்டி பகுதில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ்குமார், வெங்கக்கல்பட்டி, கரூர்.

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
திருச்சி மாவட்டம், காட்டூர்  திருச்சி- தஞ்சை சாலையின் குறுக்கு செல்லும் உய்யகொண்டான் கால்வாயில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகதாதர சீர்கேடு ஏற்படுவதுடன் ஆற்றில் தண்ணீர் செல்ல தடையாக இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அப்துல் ரகுமான், காட்டூர், திருச்சி.

கண்டுகொள்ளப்படாத பூங்கா
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கல்மேட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இன்றி அங்கு அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த பூங்காவில் புற்கள் மண்டி கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும்.  
ராம் ஆனந்த், ஸ்ரீரங்கம், திருச்சி. 

குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு 
புதுக்கோட்டை டவுன் பகுதியில்  மீன்மார்க்கெட்டிற்கு எதிர்புறம் உள்ள தெற்கு மெயின் வீதி, தெற்கு 2-வது வீதி, மேற்கு 2-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்ல பெரிதும் அச்சம் அடைகின்றனர். இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே குற்ற செயல்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். 
சீனிவாசன், புதுக்கோட்டை டவுன்.


Next Story