ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 12:58 AM IST (Updated: 20 Sept 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள பத்தன்மேடையைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 36). இவர் தனக்கு சொந்தமான 5 ஆடுகளை அவரது உறவினரான சந்தனமாரியிடம், கொடுத்து வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சந்தனமாரி சம்பவத்தன்று முக்கூடல் தாம்போதி பாலம் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வீரவநல்லூரை சேர்ந்த முருகேசன் என்ற பஞ்ச் பாலா (19), அரிகேசவநல்லூரைச் சேர்ந்த முத்து (23) உள்ளிட்ட 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து 3 ஆடுகளை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், முத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆடுகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story