விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 Sept 2021 1:05 AM IST (Updated: 20 Sept 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி அம்பேத்கர்நகர் காலனியை சேர்ந்தவர் மதிப்பு ராஜ் (வயது 55). தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் வடநத்தம்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பொய்கைமேடு விலக்கு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் மதிப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story