வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 1:23 AM IST (Updated: 20 Sept 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 38). இவர் நேற்று காலையில் வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து கொண்டு வந்து வீட்டில் உள்ள பாத்திரத்தில் ஊற்றி கொண்டிருந்தார். 

அப்போது வீட்டுக்குள் நைசாக நுழைந்த மர்ம நபர் மாரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். இதில் நிலை குலைந்த மாரி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story