கோட்டுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேர் கைது
கோட்டுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி, செப்.20&
கோட்டுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
காரைக்கால் மாவட்டத்தில் அண்மை காலமாக வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் ஆடுகள் திருடப்பட்டு வருகின்றன. இதனால், ஆடு வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர். ஒரு சிலர் போலீசில் புகார் அளித்தாலும், பலர் இது குறித்து புகார் தெரிவிப்பதில்லை. இது, ஆடு திருடுபவர்களுக்கு சாதகமாக உள்ளது.
இந்தநிலையில், கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன்பால் உத்தரவின்பேரில் காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இரு ஆடுகளுடன் வந்த 2 பேர் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ஆடு திருடர்கள் கைது
விசாரணையில், அவர்கள் பேரளம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31), கோட்டுச்சேரி ஜீவா நகரை சேர்ந்த பிரகாஷ் (45) என்பதும், மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்த 2 ஆடுகள் அதே பகுதியில் திருடியதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த பல மாதங்களாக காரைக்காலின் பல்வேறு கிராமங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று நோட்டமிட்டு ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ், பிரகாஷ் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story