மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் திடீர் சாவு + "||" + Sudden death of truck driver

லாரி டிரைவர் திடீர் சாவு

லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.
வேப்பந்தட்டை:
திருவண்ணாமலை மாவட்டம் சாமிகுடியான்பட்டியை சேர்ந்தவர் கணபதி(வயது 45). லாரி டிரைவரான இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கழிவுகளை ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டி வந்து சர்க்கரை ஆலையில் வரிசையில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை லாரியில் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கணபதி விஷம் குடித்து இறந்தாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தீயில் கருகி இளம்பெண் சாவு
மதுரையில் தீயில் கருகி இளம்பெண் பலியானார்.
2. குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. லாரி மோதி தொழிலாளி சாவு
லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன் பலி
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவன் பலியானார்.
5. சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
சிவகாசியில் தாய் கண் முன் சரக்கு வாகனம் ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.