ஏரியில் மண் அள்ளிய டிராக்டர்கள்- பொக்லைன் எந்திரம் பறிமுதல்; 3 பேர் கைது
ஏரியில் மண் அள்ளிய டிராக்டர்கள்- பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி சின்ன ஏரியில் சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளப்படுவதாக வெங்கனூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசுக்கு கிடைத்த தகவலின்பேரில், அவரது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, அனுமதியின்றி மண் அள்ளிய கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கலையரசன்(வயது 26), கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரைசாமியின் மகன் துளசிமணி(28), இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த ராசுவின் மகன் வேல்மணி (25) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story