சாலையில் கிடந்த தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த என்ஜினீயர்கள்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). திண்டுக்கல்லை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி, கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரி அருகில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையில் கேட்பாரற்று சிதறி கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் பிரேஸ்லெட், 2 மோதிரம் ஆகியவற்றை எடுத்து பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் கண்டெடுத்த தங்க நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்த 2 என்ஜினீயர்களையும், பெரும்பாக்கம் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story