சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


சென்னை புளியந்தோப்பு  பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Sept 2021 2:57 PM IST (Updated: 20 Sept 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. நீண்டநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Next Story