கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மார்ட்டின், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், அவை தலைவர் வெங்கடாசலபதி, ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கரநாராயணனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருந்ததாவது:- உரக் கடைகளில் உரம் வாங்க செல்லும் விவசாயிகளிடம் ஒரு மூடைக்கு ரூ.500 மதிப்புள்ள ஒரு வாளி கலப்பு உரம் வாங்க வேண்டும் என கடைக்காரர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்தி விவசாயிகள் கேட்கும் உரத்தை மட்டும் வழங்க வேண்டும்.
விவசாயிகள் பயன்படுத்தும் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், யூரியா ஆகிய உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து உர கடைகளுக்கும், வேளாண் கிடங்குகளுக்கும், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அதிகளவில் வழங்க வேண்டும்.
2019-20-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 2020-இல் வெள்ள நிவாரணம் கிடைக்கப்பெறாத 40 சதவீத விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
2020-21-ல் விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீடு காலதாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story