கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடுமலை
உடுமலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலைஉயர்வு, பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தி.மு.க.தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் அவரவர் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி ஏந்திஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி உடுமலை நகரில் தாராபுரம் சாலையில் தி.மு.க.நகர செயலாளர் எம்.மத்தீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர அவைத்தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், பொருளாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று உடுமலை அன்னபூரணி நகரில் வீட்டின் முன்பு தி.மு.க.மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், முன்னாள் நகராட்சி தலைவருமான சி.வேலுச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் எஸ்.செந்தில்குமார் சின்னப்பன் யு.என்பி.குமார் ஆர்.கிருஷ்ணசாமி ஆர்.டி.எஸ்.தனபால், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெஞ்சமடை
உடுமலை அருகே உள்ள வெஞ்சமடை எஸ்.வி.புரம் ஆகிய பகுதிகளில் தி.மு.க.தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வி.சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.தாலூகா செயலாளர் கே.எஸ்.ரணதேவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமலைசாமி மற்றும் காங்கிரஸ் ம.தி.மு.க.கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story