தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2021 5:34 PM IST (Updated: 20 Sept 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையில் இருந்து பாதுகாக்க நாட்டுப்புற கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையில் இருந்து பாதுகாக்க நாட்டுப்புற கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
கொரோனா வைரஸ்
கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த போதிலும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் கடந்த 2 வாரங்களாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்டம் முழுவதிலும் இருந்து திங்கள்கிழமை தோறும் ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவகத்துக்கு வந்து மனு அளித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழன்டா இயக்கம், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் டி.ராஜா, தமிழன்டா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஜெகஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட மேளக்கலைஞர் பிரம்மராஜ் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவரிடம் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்திய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். கந்துவட்டி கொடுமையில் இருந்து நாட்டுப்புற கலைஞர்களை மீட்டிட அவர்களுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதிகளில் முகாம் நடத்த வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும். கோவில் விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story