கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு


கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
x
தினத்தந்தி 20 Sep 2021 12:06 PM GMT (Updated: 20 Sep 2021 12:06 PM GMT)

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல், ஆட்டோ பிரசாரம், துண்டுபிரசுரங்கள் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் உட்பட பல்வேறு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட மளிகை பொருட்கள் கடந்த ஆண்டு 7 முறை வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 3 முறை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி பொதுமக்களுக்கு ஊராட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்த ஊராட்சி என்பதால் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

நேற்று நடந்த 2-வது கட்ட தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் கிழக்கு, மேற்கு போன்ற இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் சொந்த செலவில் ஊக்குவிக்கும் விதமாக தலா ஒரு சில்வர் குடம் பரிசாக வழங்கினார்.

இதில் வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம் சந்தியாமூவேந்தன், அஸ்வினிதேவதாஸ், துளசிபாய்சுந்தரம், பரிமளா கஜேந்திரன், சங்கர், தீபன்சக்கரவர்த்தி, விஜயாசிவக்குமார், நிவேதாபிரகாஷ், சுமதிசங்கர், அருண்ஜோதி, ஊராட்சி செயலாளர் பொற்கொடிமுருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story