கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை இல்லை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கும் ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அறுமுகம் (49) என்பவரது மகள் வினிதாவுக்கும் (22) திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் இளம்பெண் வினிதா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓபசமுத்திரத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது சேலையால் மின்விசிறியில் வினிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வினிதாவின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story