காரைக்காலில் தி.மு.க., காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


காரைக்காலில் தி.மு.க., காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2021 10:07 PM IST (Updated: 20 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து காரைக்காலில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால், செப்.
மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள கலைஞர் அகம்  முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாஜிம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 
ஆர்ப்பாட்டத்தில் திரு&பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. தியாகராஜன், தி.மு.க. நிர்வாகிகள் சங்கர், அமுதா ஆறுமுகம், முகமது ரிபாஷ், முகமது ஜாகீர் உசேன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில், அவரது வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு வட்டார தலைவர்கள் அரசன், சுப்பையன், மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயற்குழு உறுப்பினர் விண்சென்ட் மற்றும் பலர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Next Story