புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளியில் முடிதிருத்தம்


புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த  மாணவர்களுக்கு பள்ளியில் முடிதிருத்தம்
x
தினத்தந்தி 20 Sept 2021 11:46 PM IST (Updated: 20 Sept 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளியில் முடிதிருத்தம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டார்.

வேலூர்

புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளியில் முடிதிருத்தம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டார்.

புள்ளிங்கோ ஸ்டைல்

நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் சிகை அலங்காரம் போன்று இளைஞர்கள், மாணவர்கள் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். பள்ளி மாணவர்கள் பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட்டிங், ஸ்பைக், லைன் கட்டிங் என ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்கின்றனர். இந்த வகை சிகை அலங்காரம் செய்யும் இளைஞர்களை Ôபுள்ளிங்கோÕ என்று கூறுகின்றனர். 

இந்த சிகை அலங்காரம் வினோதமாகவும், ஒழுங்கின்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதுபோன்ற சிகை அலங்காரத்துக்கு வேலூரில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர்களும் இவ்வாறு முடிவெட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் இதுபோன்ற தலை முடி சிகை அலங்காரம் செய்து சுற்றி வந்தனர். பள்ளி திறந்ததும் அதே சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வர தொடங்கினர்.

100 பேருக்கு...

இதைப்பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது சொந்த செலவில் நேற்று காலை முடிதிருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் மாணவர்களை வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்து முடிதிருத்தம் செய்யப்பட்டது. நேற்று பிளஸ்&1 மற்றும் பிளஸ்&2 படிக்கும் மாணவர்கள் 100 பேருக்கு முடி வெட்டி சீரமைக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) 9 மற்றும் 10&ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முடி வெட்டப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தலைமை ஆசிரியர் நெப்போலியன் தெரிவித்தார்.

Next Story