பெண் போலீஸ் வீட்டில் நகை, பணம் திருட்டு
பெண் போலீஸ் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் ஊராட்சி மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்.
இவர், சென்னையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி விஜயபாரதி.
இவர், சென்னை மாநகர காவல் துறையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இதனால், அவர்கள் குடும்பத்துடன் சென்னை முகப்பேரில் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் நடந்த திருவிழாவில் அவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் தங்களின் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்று விட்டனர்.
அவர்களின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் யாரோ 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
நேற்று காலை எதிர் வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சொந்த கிராமத்துக்கு வந்து வீட்டை பார்த்து விட்டு கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
ஆரணி பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கண்ணமங்கலம் சப்&இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர் சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர் வீட்டில் பதிவான கைரேகை, தடயங்களை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story